அளம்பில் அந்தோணியார் ஆலயத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கள விஜயம்!

முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் அந்தோணியார் ஆலயத்தின் பெருநாள் இன்றைய தினம் (12.06) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விசேட பூஜை ஆராதனையுடன் ஆரம்பமாகி நாளை (13.06) அதிகாலை பெருநாள் ஆராதனையுடன் நிறைவடையிருக்கின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் (11.06) மாலை 4.00 மணிக்கு குறித்த ஆலயத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் நேரடியாக விஜயம் செய்து ஆலயத்தின் சுற்றுச் சூழலைப் பார்வையிட்டதுடன் ஆலய குரு முதல்வரையும் ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஆலயத்தின் தேவைகளை ஆலய நிர்வாகத்தினர் அரசாங்க அதிபரிடம் எடுத்துக்கூறினர். இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர் “தங்கள் அவசியமான தேவைகளை பார்வையிட்டு புரிந்துகொண்டதாகவும் துறைசார்ந்த திணைக்களங்களிடம் தேவைப்பாடுகளை முன்வைத்து சில தீர்வுகளை படிப்படியாக பெற்றுத்தர முயல்வதாகவும்” தெரிவித்தார்.

குறித்த விஜயத்தின் போது மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஆலய நிர்வாகத்தினர் முதலானோர் கலந்துகொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகப்பிரிவு
தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply