நேற்றைய தினம் (11.06) கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை, இலங்கையின் பல பாகங்களான மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் (காரைநகர் மற்றும் வேலணை) மற்றும் புத்தளம் (காட்பிட்டி) ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சகத்தில் சந்தித்து, பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இச்சந்திப்பின்போது, மீனவர் சங்க பிரதிநிதிகள், தமிழக மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடல் வளங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்தனர். குறிப்பாக, நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு மையிலிட்டி மீனவத் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளால் தமது கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை பொருத்தமான முறையில் அகற்றித் தருமாறு மீனவத் தலைவர்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
மீனவர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், தமிழக மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்படையுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், மீனவர் சமூகத்தினர் எதிர்கொள்ளும் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் துரிதமாகவும், உரிய முறையிலும் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
மீனவர்களின் நலன் கருதி, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு எப்போதும் மீனவர் சமூகத்தினருடன் இணைந்து செயல்படும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று