இஸ்ரேயலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிலை தொடர்பில் தாம் அவதானமாக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, அப்பகுதிகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எப்போதும் அருகிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டுமென்றும் கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் இலங்கைப் பிரஜைகளுக்கு ஆதரவளிக்க மத்திய கிழக்கில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களும் 24/7 அவசர தொடர்பு இலக்கங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அவசரநிலை தொடர்பான விடயங்களுக்கு மாத்திரமே இந்த தொடர்பு பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்பு இலக்கங்கள்

இலங்கைத் தூதரகம் – இஸ்ரேல்

+94 71 844 7305 – துணைத் தூதரகத் தலைவர்
+94 71 683 3513 – ஆலோசகர் (தொழிலாளர் நலன்)
+94 71 974 2095 – செயலாளர் (தொழிலாளர் நலன்)

இலங்கைத் தூதரகம் – தெஹ்ரான்

+98 939 2055161 – கே.ஜி.யு. லக்மால், பொறுப்பாளர்

Social Share

Leave a Reply