ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) சமீபத்தில் அதன் தேசிய கிரிக்கெட் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேஜர் மற்றும் டையர் ‘B’ போட்டிகளில் பங்குபற்றும் கழகங்களுக்கு 24 பந்துவீச்சு இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியது.
நாட்டில் பயிற்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் SLC நிர்வாகக் குழுவின் முடிவின் அடிப்படையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
கொழும்பு கிரிக்கெட் கழகத்தில் வார இறுதியில் நடைபெற்ற சிறப்பு விழாவின் போது இந்த இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன. SLC தலைவர் ஷம்மி சில்வாவின் தலைமையில் நாடடைபெற்ற நிகழ்வில் செயலாளர் பந்துல திசாநாயக்க மற்றும் தேசிய மேம்பாட்டு மையத்தின் தலைவர் கமல் தர்மசிறி ஆகியோர் கலந்து கொண்டு இயந்திரங்களை வழங்கி வைத்தனர்.
“உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும், வீரர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தேவையான கருவிகளை கழகங்களுக்கு வழங்குவதற்கும் எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது” என்று இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் பந்துல திசாநாயக்க கூறினார்.
பந்துவீச்சு இயந்திரங்களைப் பெற்ற கிளப்புகள்
மேஜர் கழகங்கள்
ப்ளூம்ஃபீல்ட் கிரிக்கெட் கழகம், NCC, கொழும்பு கிரிக்கெட் கழகம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், சிலோவ் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், ஏஸ் கபிடல் கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், நுகேகொட விளையாட்டு கழகம், தமிழ் யூனியன் கழகம், பதுரெலியா விளையாட்டுக் கழகம்
பொலீஸ் விளையாட்டுக் கழகம், குருநாகல் இளைஞர் கிரிக்கெட் கழகம், மூர்ஸ் விளையாட்டுக் கழகம், பேர்கர் பொழுதுபோக்குக் கழகம் (BRC)
டையர் B கழகங்கள்
மலாய் விளையாட்டுக் கழகம், சிங்கள விளையாட்டுக் கழகம்(SSC), நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், காலி கிரிக்கெட் கழகம், கடற்படை விளையாட்டுக் கழகம், இராணுவ விளையாட்டுக் கழகம், லியோ கிரிக்கெட் கழகம், ராகம கிரிக்கெட் கழகம், யுனைடெட் சதர்ன் கிரிக்கெட் கழகம், மொரட்டுவ விளையாட்டுக் கழகம்