இலங்கை மின்சார துறைசார் தொழிற்சங்கங்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று (14/12) போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய 15 தொழிற்சங்கங்கள் இவ்வாறு இணைந்து இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகத்தின் முன்னாள் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அத்தியட்சகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டிலுள்ள சகல பாகங்களிலும் மின் வெட்டு இடம்பெறாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கி மீள சரி செய்யப்பட்டுள்ளமையின் காரணத்தினால் இனி மின் விநியோக தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
