தமிழ் யூனியனுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த தமிழ் வீரர்கள்

இலங்கையில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில் தமிழ் யூனியன் அணி விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. தீசன் விதூசன் மற்றும் விஜயகாந்த் விஜாஸ்காந்த் ஆகியோரின் பந்துவீச்சு இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது. முதலில் துடிப்பாடிய பாணந்துறை அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை பெற்றது, இதில் செனித்த கலம்பகே 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் விஜயகாந்த் விஜாஸ்காந்த் 4 விக்கெட்களையும், தீசன் விதுஷன் 3 விக்கெட்களையும், சச்சித ஜயதிலக்க 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய தமிழ் யூனியன் அணி 26.4 ஓவர்களில் 2 விக்கெட்ளை இழந்து 175 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்களினால் வென்றது. துடுப்பாட்டத்தில் மினோட் பானுக ஆட்டமிழக்கமால் 74 ஓட்டங்களையும், சினெத் ஜெயவர்தன 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

தமிழ் யூனியன் அணி மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த தொடரில் 3 போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றி விஜயகாந்த் விஜாஸ்காந்த் தற்போது முன்னனியில் உள்ளார்.

மேஜர் லீக் தொடரில் 16 அணிகள் இரண்டு குழுக்களாக விளையாடுகின்றன.

Social Share

Leave a Reply