மட்டக்களப்பு வாகரை பகுதியியில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மூவர் நேற்று(06.07) நீரில் மூழ்கி இறந்துள்ளனர். ஒரு சிறுவனும் 10 மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகளும் காருவாங்கேணி குளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.
இறந்த மூன்று சிறார்களினது உடல்களும் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இது போன்ற சம்பவங்கள், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சிறுவர்களின் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயமாகும்.