லாராவுக்காக தன் சாதனையை விட்டுக்கொடுத்த வியான் மல்டர்

தென்னாபிரிக்க மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி வருகிறது. முதலில் தென்னாபிரிக்கா அணி துடுப்பாடியது. இந்தப் போட்டியின் தலைவராக விளையாடி வரும் வியான் மல்டர் 367 ஓட்டங்களை பெற்ற நிலையில் அணியின் துடுப்பாட்டத்தை நிறுத்தினார். பிரைன் லாரா பெற்றுகொண்ட 400 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தும் அவர் அவ்வாறு செய்யவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நேற்றைய நாள் நிறைவடைந்ததும் அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார். பிரையன் லாராவின் சாதனையை தான் முறியடிக்க விரும்பவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதனையே செய்வேன் என கூறியுள்ளார். லாரா ஒரு மகத்தான வீரர். இங்கிலாந்து அணிக்கெதிராக அவர் பெற்ற சாதனை அவரிடம் இருப்பதே சிறந்தது என அவர் கூறியுள்ளார். விளையாட்டுக்கும், விளையாட்டுக்குள் உறவை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்ய வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கூற்று பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுளளதுடன், அவர் மீது பலருக்கும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply