இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இங்கிலாந்து லோட்டஸ் ண்மைத்தனத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணிக்கு 193 ஓட்ட வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
இந்தப் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஜோ ரூட் 40 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் வொசிங்டன் சுந்தர் 4 விக்கெட்ளையும், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
முதல் இன்னிங்சில் இரண்டு அணிகளும் 387 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டன. டெஸ்ட் வரலாற்றில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் ஒரே ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டமை இதுவே முதற் தடவையாகும்.
இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 104 ஓட்டங்களையும், ப்ரய்டன் கார்ஸ் 56 ஓட்டங்களையும், ஜேமி ஸ்மித் 52 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ், நித்திஸ் குமார் ரெட்டி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்தியா அணியின் முதல் இன்னிங்சில் லோகேஷ் ராகுல் 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரிஷாப் பாண்ட் 74 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா 72 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களையும், ஜொப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.