2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாகவும் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.