நேபாளத்தில் உள்ள போராட்டக்காரர்கள் நேற்று (09.09) காத்மாண்டுவில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கும் தீ வைத்துள்ளனர்.
மேலும், பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு உட்பட பல கட்டிடங்களை போராட்டக்காரர்கள் எரித்து அழித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டவர்களில் அமைச்சர்களும் அடங்குவதுடன், மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த அமைதியின்மை நிலைமையில் எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.