ரஷ்யா, ஓமன், துபாய் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த 15 இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (11.09) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட பாதாள உலக உறுப்பினர்களை அவர்கள் தங்கியிருந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025.01.01 முதல் இன்றுவரை, வெளிநாடுகளில் மறைந்திருந்த 11 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தையும் சிறுத்தைகளின் உயிரையும் பாதுகாக்கும் காப்புறுதித் திட்டம்