ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் 2025 ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (12.09) துபாயில் இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தானும் ஓமனும் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் கிரிக்கெட் பிரியர்கள் மத்தியில் இப்போட்டி சிறப்பு பெறுகிறது.
இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.