மதகுரு கிரிஜி மகாராஜ் மற்றும் அமைச்சர் விஜித ஹெரத்துக்கும் இடையே சந்திப்பு!

இந்தியாவின் அயோத்தியில் உள்ள சிவன் கோயிலின் தலைமை குருவாகிய கைஷானந்த் கிரிஜி மகாராஜுக்கும் அமைச்சர் விஜித ஹெரத்துக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் அயோத்தியில் உள்ள சிவன் கோயிலின் தலைமை குருக்கள் கைஷானந்த் கிரிஜி மகாராஜ், இலங்கைக்கு விஜயம் செய்தபோது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்தை சந்தித்துள்ளார்.

தலைமை குருக்களான கைஷானந்த் கிரிஜி மகாராஜ் மற்றும் 14 பொது மற்றும் மத பிரமுகர்கள் அடங்கிய இந்தக் குழு, இலங்கையில் பல இடங்களுக்கு விஜயம் செய்யவும் தீர்மானித்துள்ளனர்.

இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சிவன் கோயில்களில் மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நுவரெலியாவில் உள்ள சித்த அம்மன் கோயில் மற்றும் பொலன்னருயிலுள்ள புராதன இடங்களுக்கும் பயணிக்க உள்ளனர்.

Social Share

Leave a Reply