முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் கீழ், இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை காவலில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் மிகக் கொடிய தீவிரவாத தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படும் 2019 ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல் நிகழ்வைத் தடுக்கத் தவறியதாக சுரேஷ் சல்லே மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply