14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – திடுக்கிடும் தகவல்கள்!

சிலாபம் பகுதியில் பெற்றோருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த 14 வயது சிறுமி ஒருவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிலாபம் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகம் தெரிவித்துள்ளது.

2024 ஏப்ரல் 12 அன்று நாத்தாண்டிய, வலகாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவர் வீட்டில் துஷ்பிரயோகத்திற்கு, இந்த சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய சந்தேகநபர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 2025 ஜூலை 5ம் திகதி நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த காதலனுடன் ஒரே நாளில் இரண்டு முறை உறவில் ஈடுபட்டதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள அந்த சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது சிறுமி தாயின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply