லாஃப்ஸ் கேஸ் வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு!

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு சரக்குகளை ஏற்றிய கப்பல் இன்று (28.02) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் எரிவாயு கையிருப்புகள் விரைவாக சந்தைக்கு விடுவிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இல்லத் தேவைகளுக்கான வாடிக்கையாளர்கள் இன்று முதல் வழமையான முறையில் லாஃப்ஸ் கேஸ் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்கள் மூலம் தேவையான எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதற்கான அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply