ஈரானின் உச்ச தலைவர் மரணமடைந்த பின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் விடயத்தில் தாம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் புதிய தலைவரை நியமிக்க முயற்சித்தால், இரான் “நேரத்தை வீணடிக்கும்” வேலையை செய்கிறது என தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் உச்ச தலைவர் அலி காமெனெயியின் மகன் மொஜ்தபா காமெனெயி அடுத்த தலைவராக அதிக வாய்ப்பு உள்ளவராக கருதப்படுகிறார் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், அந்த நியமனத்தை தாம் ஏற்கமாட்டேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“காமெனெயியின் மகன் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாது. இரானுக்கு ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டு வரக்கூடிய ஒருவரே தேவை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.