அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் உயிரிழந்த 87 ஈரானிய மாலுமிகளின் உடல்களை கையாள்வதில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நிர்வாகம் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த உடல்களை இன்னும் எவ்வளவு காலம் மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து எந்த உத்தியோகபூர்வ தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் ரங்க தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் அதிகளவிலான உடல்கள் கொண்டு வரப்பட்டதால் அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த உடல்கள் கராப்பிட்டிய மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.