எரிபொருள் விலை உயர்வு!

இலங்கையில் எரிபொருள் விலைகள் நேற்று (09.02) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோலின் ஒரு லிட்டர் விலை =24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ. 317 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ. 365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ. 303 ஆகவும், சூப்பர் டீசல் ரூ. 24 அதிகரிக்கப்பட்டு ரூ. 353 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை ரூ. 13 அதிகரிக்கப்பட்டு ரூ. 195 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply