பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் உயர்வு!

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பள்ளி மாணவர் போக்குவரத்து வாகனங்களின் கட்டணத்தை இன்று (10.02) முதல் 5% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், பல முறை எரிபொருள் விலை திருத்தப்பட்ட போதிலும் இதுவரை கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றார்.

எனினும், இம்முறை டீசல் விலை ரூ.22 உயர்ந்துள்ளதால், போக்குவரத்து கட்டணத்தை 5% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏனைய சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply