உலக சந்தையில் கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சற்றுக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் சுமார் 87.88 அமெரிக்க டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் சுமார் 83.35 அமெரிக்க டாலராகவும் பதிவாகியுள்ளது.
ஜூலை 2022க்கு பிறகு முதல் முறையாக திங்கட்கிழமை கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலரைத் தாண்டி, அதிகபட்சமாக 119 டாலர் வரை உயர்ந்தது. மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போர் விரைவில் முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 8% குறைந்து 90 டாலர் வரை தாழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.