இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திடீரென பதவியில் இருந்து விலகியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பரில் ஏற்பட்ட பெரிய அவசர நிலையே இதற்க்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடு காரணமாக 4,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் அது இண்டிகோ வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இந்திய விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நிறுவனத்திற்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் விமான சேவை ரத்து மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக இண்டிகோ பங்குகள் இந்த வருடத்தில் 13.5% குறைந்துள்ளன.