ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பு – சுரேஷ் சல்லே குறித்து நீதிமன்றத்தில் CID தகவல்!

ஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பு – சுரேஷ் சல்லே குறித்து நீதிமன்றத்தில் CID தகவல்!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது தடுப்பில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்புடையவை என கொழும்பு கோட்டை நீதவான் இஸுரு நெத்திக்குமார இன்று தெரிவித்தார்.
இது கடமையில் அலட்சியம் அல்லது தொடர்பில்லாத வேறு குற்றச்சாட்டுகள் அல்ல என்றும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி இணைப்பு உள்ள விசாரணை எனவும் நீதவான் தெரிவித்துளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை
குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
CID நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது,
கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை இலக்காகக் கொண்ட தாக்குதலுக்கு முன்பாக,
சஹ்ரானின் குழுவுக்காக தகவல் சேகரிக்கும் பணியில் சுரேஷ் சல்லே நேரடியாக தொடர்புடையிருந்ததாகவும்,
அதற்காக தனது தகவல் வழங்குபவர்களில் ஒருவரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

Social Share

Leave a Reply