பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் பெற்றோலியத்தைப் பெறுவதற்காக இலங்கை இந்தியாவிடம் உதவி கோரியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ரன்திர் ஜைஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகள், இந்தியாவின் ‘Neighborhood First’ எனப்படும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளை சமாளிப்பதற்கும், பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் இந்த உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோலிய விநியோகம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையில் தற்போது மேலதிக இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.