இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் பின்னர், டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடி படகிலிருந்து 123 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் அந்த படகு, இலங்கை கடற்படையின் நீண்ட தூர கடல்சார் படைப்பிரிவால் இன்று (16.03) அதிகாலை கடலில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், படகில் இருந்த ஐந்து சந்தேக நபர்களுடன் குறித்த படகு டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
3 பில்லியன் ரூபா பெறுமதி மிக்க போதைப்பொருட்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு சென்று, மீட்கப்பட்ட போதைப்பொருட்களை நேரில் பார்வையிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்றன.