வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற 23வது சர்வதேச பாடசாலைகள் U13 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைசியம் வத்தளை அணி லீட்ஸ் சர்வதேச பாடசாலையை 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய லீட்ஸ் அணி 21.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இதில் தினுக டி சொய்சா 47(43) ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் லெவோன் குலதுங்க 3 விக்கெட்டுகளையும், ஒமெத் சில்வா, நித்தில ஜயகொடி, லகிந்து ரன்தித, பிசத் ஹலங்கொட ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லைசியம் வத்தளை அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 93 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது. இதில் அணுக செனவிரத்ன 24(24) ஓட்டங்களையும், லகிந்து ரந்தித 23(19) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஒமிக்க விதேவ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.