அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான் கடற்படைத் தளபதி!

இரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி, கடற்படை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் பதிலடி சந்திக்கும் என எச்சரித்துள்ளார்.

கடந்த மார்ச் 4ம் திகதி, இந்தியாவில் நடைபெற்ற கடற்படை பயிற்சியில் இருந்து திரும்பிய “டேனா” (Dena) போர்க்கப்பல், காலி கடற்கரைக்கு அருகில் தாக்கப்பட்டதையடுத்து 100க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது “எதிரியின் குற்றத்தை மறக்கமாட்டோம்; எதிர்பாராத இடங்களில் இருந்து கடும் தாக்குதல் நடத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உலகளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply