சமையல் எரிவாயு தொடர்பில் லிட்ரோ அறிவிப்பு!

நாடு முழுவதும் சமையல் எரிவாயுவின் தேவையை எந்தவித இடையூறும் இன்றி பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் இறுதி வரை தேவைப்படும் எரிவாயு கையிருப்பு ஏற்கனவே பாதுகாப்பாக உள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த கையிருப்பு மாலத்தீவில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒருமுறை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுட்டுள்ளது.

Social Share

Leave a Reply