இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – நால்வர் பலி!

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் வீதியின் வீராவில பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (SLTB) 2 பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுனர்.

கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்தொன்றும், திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து கராப்பிட்டிய நோக்கி பயணித்த மற்றொரு SLTB பேருந்தும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply