‘இன்று விபத்து நாள்’

மீரிகம பிரதேசத்தில் புகையிரத – லொரி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இதனால் பிரதான புகையிரத பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

புகையிரத கடவையை மீறி லொரி பயணிக்க முற்பட்டமையினாலேயே குறித்த விபத்து நேர்ந்ததாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் நேற்றிரவு (14/12) திருகோணமலை பிரீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதம் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீனக் குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் சீனக் குடா – கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் தற்சமயம் அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை தென்மாகாண நெடுஞ்சாலையில் மில்லேனிய தொடங்கொட பகுதியில் இன்று (15/12) காலை இடம்பெற்ற விபத்தில் 39 வயதுடைய தந்தையும் 4 வயதுடைய அவரது பிள்ளையும் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பை நோக்கி வந்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘இன்று விபத்து நாள்'
‘இன்று விபத்து நாள்'

Social Share

Leave a Reply