இலங்கை அகதிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – அமைச்சர் பிமல்!

இலங்கை, உள்நாட்டுப் போரின்போது நாடு விட்டு வெளியேறி தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் அனைவரையும் வரவேற்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமான The Hindu-க்கு அளித்த நேர்காணலில் அவர் இதனியா தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது அகதிகளை அரசியல் பிரச்சார கருவியாக பயன்படுத்த வேண்டாம் என்று இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசுகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு போருக்கு பிந்தைய காலத்தில் இருந்து 2025 ஜூன் வரை 18,542 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளதாகவும், திரும்ப விரும்புவோருக்கு அரசு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் பிறந்து வளர்ந்தோ, அங்கே வாழ்க்கையை அமைத்தோ உள்ளவர்கள் இந்திய குடியுரிமை கோருவது அவர்களின் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply