இஸ்ரேல் இராணுவம், அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரின் பின்னணியில் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, ஜெருசலேமில் உள்ள Al‑Aqsa Mosque வளாகத்தை மூடியிருந்த நிலையில், ஈத் தொழுகையை நடத்த முயன்ற பாலஸ்தீனர்களை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி தாக்கினர் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
போரின் தொடக்கத்திலிருந்து அல்-அக்ஸா வளாகத்திற்கு நுழைவு கட்டுப்படுத்தப்பட்டு, பல முஸ்லிம் வழிபாட்டாளர்கள் பழைய நகருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.