சுற்றுலா துறையை ஊக்குவிக்க காத்தான்குடியில் புதிய திட்டம்!

காத்தான்குடியில் “Lagoon Park and Tourist Boat Service” திட்டம் நேற்று (22.03) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

இத்திட்டம், அந்தப் பகுதியின் அழகை மேம்படுத்துவதோடு சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வு காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ். எச். எம். அஸ்ஃபர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர், சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply