5 நாட்களுக்கு போரை நிறு த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சுவார்த்தைகள் நல்லதும் பயனுள்ளதுமானதாக இருந்ததால், இரானின் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்மானம் குறித்து வெளிவந்த தகவல்கள்:
* மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் தற்காலிகமாக நிறைவுக்கு வரும்.
* குறிப்பாக ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி தொடர்பான அமைப்புகள் மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதல்களே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
* இந்த 5 நாட்கள் காலத்தில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
* பேச்சுவார்த்தை முடிவைப் பொறுத்து அடுத்த முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.