அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Financial Times பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர், “எனக்கு மிகவும் பிடித்தது ஈரானின் எண்ணெயை எடுத்துக்கொள்வதுதான்” எனக் குறிப்பிட்டார். மேலும், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg Island தீவை அமெரிக்கா “மிக எளிதாக கைப்பற்ற முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகள் பணியமர்த்தப்பட்டுள்ள சூழலில் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளதால், சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.