தந்தை செல்வாவின் ஜனன தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்களின் ஜனன தின நிகழ்வு இன்று காலை (31.03) வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுர்க்கத்தில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, முன்னாள் மாநகர பிரதிமுதல்வர் ப.கார்த்தீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உபதவிசாளர் பா.கோணேஸ்வரி, பிரதேசசபை உறுப்பினர்களான கே.தர்சினி, சுரேந்திரன், க.சரோஜாதேவி மாநகரசபை உறுப்பினர்களான யோகேஸ்வரி, வரதலட்சுமி, ரவீந்திரன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக்கிளை செயலாளர் ந.கருணாநிதி, கட்சி உறுப்பினர்கள், தந்தை செல்வா நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply