லிட்ரோ நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு

கொழும்பு துறைமுகத்திற்கு சமீபத்தில் வருகை தந்திருந்த நிலையில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

எரிவாயுக் கப்பல் சமீபத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், அதிலுள்ள எரிவாயு திரவ கலவையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று (14/12) இடம்பெற்ற நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தொழிநுட்ப குழு கூட்டத்தில் குறித்த கப்பலில் இருந்த எரிவாயு குறிப்பிட்ட வகையில் சரியான தரத்தில் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு

Social Share

Leave a Reply