கொழும்பு முதன்மை நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களின் மகன் ஷமிந்திர ராஜபக்ச மற்றும்கபில சந்திரசேன அவர்களின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
SriLankan Airlines நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதிமன்ற நீதிபதி அசங்க எஸ். போதராகம இந்த உத்தரவை, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்து வழங்கினார்.
மேலும், குறித்த நபர்கள் நாட்டிற்கு வந்தால் உடனடியாக கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியேற்றத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.