ராஜஸ்தான் ரோயல்ஸ் அதிரடி வெற்றி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று(07.04) குவாத்தியில் நடைபெற்ற போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 27 ஓட்டங்களினால் வெற்றி பெற்று முதலாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி 11 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 77 ஓட்டங்களையும், வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அல்லா கசன்பர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 11 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷேர்பென் ருத்தர்போர்ட் 8 பந்துகளில் 25 ஓட்டங்களையும், நமன் திர் 13 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நன்றே பேர்கர், ரவி பிஷ்ணோய், சந்தீப் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜோப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த போட்டியின் நாயகனாக யஷஷ்வி ஜெய்ஸ்வால் தெரிவு செய்யப்பட்டார்.

Rajasthan Royals won by a huge margin

The match between Mumbai Indians and Rajasthan Royals was played in Guwahati yesterday. The match was reduced to 11 overs due to rain. Rajasthan Royals won the match by 27 runs and moved to the top of the points table.

Mumbai Indians won the toss and chose to field first.

Rajasthan Royals came in to bat and made a strong start, scoring 150 runs for the loss of 3 wickets in 11 overs. Yashasvi Jaiswal played an outstanding innings, scoring an unbeaten 77 runs off 32 balls. Vaibhav Suryavanshi contributed 32 runs off 14 balls.

For Mumbai Indians, Allah Ghazanfar took 2 wickets.

Chasing a target of 151, Mumbai Indians struggled from the beginning, losing wickets regularly. They managed to score 123 runs for the loss of 9 wickets in 11 overs. Sherfane Rutherford, who came in as an impact player, scored 25 runs off 8 balls, while Naman Dhir added 25 runs off 13 balls.

In Rajasthan Royals’ bowling attack, Nandre Burger, Ravi Bishnoi, and Sandeep Sharma took 2 wickets each. Jofra Archer and Tushar Deshpande picked up one wicket each.

Yashasvi Jaiswal was named the Player of the Match.

(Written in Tamil and English – Piravic)

Social Share

Leave a Reply