2026 ஆம் ஆண்டிற்கான 1ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான செயற்பாட்டு புத்தக விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த விநியோக நடவடிக்கை இம்மாத ஆரம்பத்தில் தொடங்கியுள்ளதுடன், ஏப்ரல் 30க்குள் அனைத்து பாடசாலைகளிலும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மாகாண அடிப்படைக் கல்வி பாடப்பிரிவு இயக்குநர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் பாடத்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாண கல்வி இயக்குநர்களுக்கு, கூடுதல் பயிற்சி அமர்வுகள் தேவையானால் அவற்றை மே 16க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் திட்டத்தை சீராக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதே நோக்கமாகும் ரன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1ஆம் வகுப்பு முதல் தவணைக்கான பாட அலகுகளை நிறைவு செய்ய முடியாத பாடசாலைகள், அவற்றை இரண்டாம் தவணையின் போது கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சக அறிக்கையின் படி, இந்த செயல்முறையை மேற்பார்வை செய்ய பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.