முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நபரைத் துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பிரேமலால் ஜெயசேகர கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.