‘தித்வா’ நிவாரண நிதிக்கு பொலிசாரின் நன்கொடை!

தித்வா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள “Rebuilding Sri Lanka” நிதிக்கு, ஒரு நாள் சம்பளமாக ரூ. 9,687,462 தொகையை பொலீஸ் அதிகாரிகள் நன்கொடையாக வழங்கியுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புதிய நன்கொடையுடன், பொலிஸ் அதிகாரிகள் மூன்று முறை ஒரு நாள் சம்பள நன்கொடையாக வழங்கிய மொத்த தொகை ரூ. 74 மில்லியனை கடந்துள்ளது.

இந்த நிதி, புதன்கிழமை (22.04) ஜனாதிபதி செயலகத்தில், காவல் துறை தலைமை அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சிரேஷ்ட பொலிஸ் மேற்பார்வையாளர் C.C. பமுனுவராச்சி அவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாரநாயக்க அவர்களிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply