இரத்தினபுரி சந்தை வளாகத்தில் தீ விபத்து!

இரத்தினபுர நகரத்தின் மையத்தில் உள்ள சந்தை வளாகத்தில் இன்று (23.04) அதிகாலை சுமார் 3.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் தொண்ணூறு கடைகள் சேதமடைந்துள்ளன.

மூன்று மாடிகளைக் கொண்ட இந்த சந்தையின் இரண்டாவது மாடியிலேயே தீ பரவ ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது.

காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு, உப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்கும் பல கடைகள் இந்தத் தீ விபத்தில் முற்றிலுமாக அழிந்துள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட இரத்தினபுர சந்தை வளாகத்தை சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன பார்வையிட்டு, இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டார்.

தீ விபத்தால் சேதமடைந்த கட்டிட வளாகத்தை அவசரமாக சீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதுவரை சந்தை வளாகத்தின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த தரைத்தளத்தை, அங்கு வியாபாரம் செய்து வந்த வணிகர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இரத்னபுரி மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply