தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் உள்ள தம்புள்ள நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளாகியுள்ளன.

இன்று (26.04) காலை சுமார் 9.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த பதினொரு பேர் நாலந்த மாவட்ட மருத்துவமனை மற்றும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனியார் பேருந்தின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், எனினும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற வேளையில், சபாநாயகரும் கண்டி வழியாக கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தத்துடன், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்புவதற்கு சபாநாயகர் உதவியதாகக் கூறப்படுகிறது.

தம்புள்ள காவல்துறையினர் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply