சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் இன்று (26.04) IPL இன் 37 ஆவது போட்டியாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு
செய்தது.
முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து
158 ஓட்டங்களை பெற்றது. சென்னை அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. இறுதி நேரத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் டூபே ஆகியோர் 59 ஓட்டங்களை 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியை நல்ல நிலைக்கு உயர்த்தினர். துடுப்பாட்டத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 74(60) ஓட்டங்களையும், ஷிவம் டூபே 22(17) ஓட்டங்களையும் பெற்றனர்.
ககிஸோ ரபாடா 3 விக்கெட்களையும், அர்ஷாட் கான் 2 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ், மனவ் சுதர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பாடி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் சாய் சுதர்ஷன் 86(47) ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 39(30) ஓட்டங்களையும், ஷுப்மன் கில் 33(23)ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அகீல் ஹொசைன், நூர் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்த போட்டியின் நாயகனாக ககிஸோ ரபாடா தெரிவு செய்யப்பட்டார்.