பதவி விலகுகிறார் ஷம்மி சில்வா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, தனது ஏழு ஆண்டுகால பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, புதன்கிழமை பதவி விலக உள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, அரசாங்க தரப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான இரான் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, அதன் பின்னரும் பல முறை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து அந்தப் பதவியில் பணியாற்றி வந்தார்.

Social Share

Leave a Reply