கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் வத்தளை Lyceum சர்வதேச பாடசாலை!

வத்தளை Lyceum சர்வதேச பாடசாலை, இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

2025/26 ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட Division II Tier A கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று, இந்த பெருமைக்குரிய பட்டத்தை கைப்பற்றிய முதல் சர்வதேச பாடசாலையாக வத்தளை லைசியம் பாடசாலை திகழ்கிறது.

மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட வத்தளை லைசியம் பாடசாலை அணி, அதில் 8 போட்டிகளில் நேரடி வெற்றிகளைப் பதிவு செய்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

இந்த அணியின் சிறப்பான செயல்பாடுகள் மூலம்ஸ்ரீ தேவானந்தா கல்லூரி, வித்யாலாக கல்லூரி, திஸ்ஸ மத்திய கல்லூரி, புனித ஜோன்ஸ் கல்லூரி, தர்மபால வித்தியாலயம், வித்யர்த்த கல்லூரி, மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரி போன்ற பல பாடசாலைகளை வெற்றிகரமாக சமாளித்துள்ளது.

இந்த வெற்றி, அணியின் திறமை, ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளது.

மேலும், இந்த சாம்பியன்ஷிப் வெற்றியின் மூலம் வத்தளை லைசியம் அணி Division I Tier A நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

வத்தளை லைசியம் பாடசாலையின் இந்த வரலாற்றுச் சாதனை, இலங்கை பாடசாலை கிரிக்கெட்டில் புதிய தரத்தை உருவாக்கியதுடன், பலருக்கும் ஊக்கமாகவும் திகழ்கிறது.

Social Share

Leave a Reply