மின்னல் தாக்கி இருவர் பலி!

நேற்று (27.04) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து விஜயபுரப் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

50 மற்றும் 49 வயதுடைய அந்த இரு ஆண்களும் விஜயபுரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கனக்கன்மடுகம மற்றும் புளியங்குளமவில் உள்ள தங்களது நெல் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply