தலவத்து ஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலெத்தென்ன பகுதியில் நேற்று (29.04) மாலை மின்சாரம் தாக்கி 83 வயதுடைய மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சி அன்டனாவுடன் இணைக்கப்பட்டிருந்த அறுந்து விழுந்த மின்கம்பியின் மீது தவறுதலாக கால் வைத்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவத்து ஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.